SIVASIVA

Tuesday 8 October 2013

கோரக்க சித்தர் தியான முறை



தியானம்

பிரணவத்தைப் பொருளோடு திரும்பத் திரும்பக் கூறுவதே தியானம் என்கிறது பதஞ்சலி சூத்திரம் (யோக தந்தை பதஞ்சலி சித்தர்)
ஒம்காரத்தை அதன் பொருளுணர்ந்து ஜபித்தால் ஈஸ்வரத் தியானம் கிட்டுகிறது. சாதாரண உணர்வுக்குக் கீழே போகிற நிலை தூக்கமெனப்படுகிற்து தியானமோ உணர்வுக்கு மேலே போகிற நிலை விழித்துக்கொண்டே தூங்குவதெனலாம் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறும் நிலையே தியானம்.
ஐம்புலன்களிருந்து மனத்தைப் மீட்கப் பயிற்சி செய்வதே தியானமாகும். ஒரு பொருளை முழுவதும் அறிந்துகொள்ள குரங்கு பிடியாக பிடித்துக் கொள்வதுதான் தியானம்.
தியானத்தின் ஒரு துளி சுவை கண்டவர்கள்கூட சாதாரண உலக வாழ்க்கையை விரும்பமாட்டார்கள். தியணத்திற்காக அதிகமாக உடலையும் வருத்தக் கூடாது.
தியாண,த்தை காலி வயிற்றில் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் மனம் ஐக்கியமாகும் பிரம்ம முகூர்த்தமான காலை 4 முதல் 6 வரையிலும் மாலை 5 மணிமுதல் 7 மணிவரையிலும் தியானத்திற்கு ஏற்ற நேரமாகும். தியானம் ஒர் உயர்ந்த வழி உன்னதமான நோக்கதிற்கே உபயோகப்பட வேண்டும் எப்படி எண்ணுகிறாயோ அப்படியே ஆகிறாய் என்ற நியதிப்படி தியானம் அமைகிறது.
மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் எச்செயலும் வெற்றி பெரும். சாதாரண மணநிலையில் ஒருவன் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது ஐம்புலன்களும் அவைகளின் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கும். தியானத்தை வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து செய்யவேண்டும்.
கோரக்க சித்தர் தியான முறையை இவ்வாரு கூருகிறார்.
வடமுகமா யாதனமேல் அமர்ந்து யாக்கை
வலுவாகத் திரேகந்தலை யசைந்தி டாமல்
தடமாக இருந்து இருவாசல் பூட்டித்
திங்களொடு தினகரனைப் பிறழா தேற்றி
வடக்கு முகமாக ஆசணத்தில் அமர்ந்து உடம்பை வலுவாக நிறுத்தி உடல், தலை கை, கால் அசைந்திடாமல் மலையைப் போல் உறுதியாக நின்று, இரு கண்களையும் மூடி சந்திர சூரிய கலைகளில் முறை பிசகாமல் வாசியை ஏற்றி இறக்கி தியானம் செய்யச் சொலகிறார்.
சந்திர கலை = இடது நாசித்துவாரம் சூரிய கலை = வலுதும்
 நாசித்துவாரம்
வாசி = மூச்சுக் காற்று
தியானத்திற்கும் பொருள் வசதிக்கும் .யாதொரு தொடர்பும் இல்லை. தியானத்தில் சித்தயடைந்து அற்புத ஆற்றலுடன் ஒருவர் இருந்தாலும் பிறர் அறியாமல் சாதாரண மனிதனைப்போல் வாழலாம். தியானத்தினால் மனச்சலனம் அழிக்கப்ட்டு புலன்களின் ஓட்டமும் கட்டுப்படும். ஒரு சிலருக்கு எத்தனை முயற்ச்சி செய்தாலும் மனதை ஒரு குறிப்பிட்ட பொருளில் ஒரு வினாடிக்கூட நிறுத்த முடியாது. தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் இந்த நிலையை மாற்றலாம். காற்றில் ஆடாத தீபம் போல தியானத்தின் போது மனம் சலனமற்றிருக்க வேண்டும் என்கிறது பகவத் கீதை.
தனிமையான இடத்தில் ஒருமுகப்படுத்தப்பட்ட மனுதுடன் பிராணாயாமம் செய்து மனச்சம் நிலையுடன் தியானம் பழகவேண்டும் பார்பவன் பார்க்கப்படும் பொருள் என்ற நிலையை தாண்டி அனுபவிக்கும் ஆனந்த உணர்வை நிலைபடுத்திக் கொள்ள தியானத்தில் முயலவேண்டும். வெளித்தோற்றத்தில் ஒருவன் தியானிப்பதுபோல தோன்றினாலும் சாதகனின் மனம் தியானப் பொருளில் போராடிக்கொண்டிருக்கும். தியானத்திற்கு மனோ பலவீனங்களை முதலில் வெல்ல வேண்டும்.

1 comment: