SIVASIVA

Thursday, 24 January 2013

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்.

முருகன் சென்னை மாற்று திறனாளிகலுக்கு அரசு பலவகையில் உதவி செய்வதக சொல்லுராங்கள் ஆனாள் அங்கு சென்றள் தேவை இல்லமால் ஆலக்கழிப்பு செய்கிரர்கள் அரசு அதிகரிகள் உதரனத்துக்கு என் நண்பன் மாற்றுத்திறனாளி இவருக்கு ஊனம் முறறேர் உக்கத் தொகையக மாதம் 1000 ரூபாய் தருவதக அரசு திட்டம் இருந்தும் இவர் பதிவு செய்து 2 வருடம் ஆகுது இது வரை உதவித் தொகை கிடைக்க வில்லை யாரிடம் புகர் கோடுப்பது தெரித்தல் எனக்கும் தெரியபடுத்தவும்




டிசம்பர் 3: இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்.

அன்பும் வாய்ப்பும் அள்ளித் தருவோம்.....
ஒன்றாய் இணைந்தே விண்ணைத் தொடுவோம்!!!





stone art

படத்தில் காண்பது போன்று மூன்று வளையங்கள் ஒரே காலில் செய்தது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் கோயிலில் உள்ளது சிற்பக்கலையில் சோழர்களில் சிறப்பை உணர்த்திக்கொண்டு இன்றும் அனைவரையும் வியக்கவைக்கிறது.




sivamediation

śivo guruḥ śivo vedaḥ śiva devaḥ śivaḥ prabhuḥ |
śivo'smyahaṁ śivaḥ sarvaṁ śivadanyanna kiṁcana ||


Shiva alone is Guru; Shiva alone is Vedas;
Shiva alone is Lord; Shiva alone is Shiva;
Shiva alone is All. There is none other than Shiva.

~ Varaha Upanishad (IV.32) of the Krsna Yajurveda




ஸ்ரீ சரபேஸ்வரர்,அதாவது சிவபெருமானின் ஒரு அவதாரம்


இவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்,அதாவது சிவபெருமானின் ஒரு அவதாரம்...அவதாரம் என்றவுடன்,மனிதனைப் போல் பிறந்து இறப்பவர் என்று நினைத்துவிடக் கூடாது.சுவாமி,தன் பக்தர்கள் துயரை துடைக்க ஒரு திருவவதாரம் எடுத்து,தன் வேலை முடிந்தவுடன் மறைவார்..இவர் விஷ்ணுவைப் போல் பிறப்பதில்லை... ஸ்ரீ சரபேஸ்வரர் அவதாரம் ஏன் ஏற்பட்டது என்று,இனி பார்ப்போம்...

ஹிரண்யன் எனும் கொடியவன் ,பிரம்மாவிடம் வரம் பெற்று,பல கொடிய செயல்களை செய்து வந்தான்...பெரும் நாத்திகனாகவும் இருந்தான்...அவனுக்கு,பிரகலாதன் எனும் ஒரு மகன் இருந்தான்...அவன் ஒரு பெரும் விஷ்ணு பக்தன்....ஒரு முறை,அவன் தந்தை,தன் மகனை எப்படியாவது தன் பக்கம் கொண்டுவந்துவிட வேண்டும்,அவனை எப்படியாவது விஷ்ணு பக்தியிலிருந்து திசை திருப்ப வேண்டும் என்று,பிரகலாதனிடம் பலவாறு உபதேசம் கூறினான்...பிரகலாதன் அவன் உபதேசத்துக்கு செவிசாய்க்கவில்லை...

இருவருக்கும் வாக்குவாதம் வர,விஷ்ணு தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானென கூற,அருகில் இருந்த தூணில் உன் விஷ்ணு கடவுள் வருவானா என்று ஹிரண்யன் சவால் விட,விஷ்ணு நரசிம்ஹ அவதாரம் எடுத்து,அத்தூணை பிளந்து,ஹிரண்யனை கொன்று,அவன் ரத்தத்தை குடித்து தீர்த்தான்...ஆனால்,அவன் ரத்தத்தை குடித்தவுடன்,மிகவும் கர்வம் கொண்டு,தன் நிலமை மறந்து, உலகை துன்புறுத்த ஆரம்பித்தான்...


தேவர்கள் எல்லோரும் அதனை பொறுக்க முடியாமல்,எம்பெருமான் சிவனிடத்தில் தஞ்சம் புகுந்தனர்...அன்பற்கு அன்பனான எந்தை பெருமான்,வீரபத்திரரை நோக்கி,"நரசிம்ஹத்தின் செருக்கை அழி" என்று கட்டளையிட்டார்... வீரபத்திர ருத்ர மூர்த்தி சரபபக்ஷி உருவெடுத்தார்....சரப பக்ஷி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் ஒரு பெரிய பறவை....அந்த உருவை வீரபத்திர ருத்ரர் எடுத்து,நரசிம்ஹத்தின் பிடரியில் பாய்ந்து,அந்த அங்கங்கள் எல்லாவற்றையும் குத்த,கர்வம் அகன்ற நரசிம்ஹத்தை உயிர் இறக்க செய்தார்...அதன் தோலை உரித்து,சிவபெருமானின் திருச்சன்னதியில் வைத்து,வணங்கினார்,சிவ பெருமானை....அங்குள்ள தேவர்கள் எல்லோரும்,அந்த நரசிம்ஹத்தின் தோலை ஆடையாக அணிந்துக் கொள்ளும்படி ,சிவபெருமானிடம்,விண்ணப்பித்தார்கள்...சிவபெருமான் தன் அன்பர்களின் வேண்டுகோளை ஏற்று,அவ்வாறே செய்தார்.. இந்த வரலாறு,சைவர்கள் கட்டிய புளுகு என்று வைணவர்கள் கூறுவார்கள்..அதனால்,வேதத்திலிருந்து நாம் சான்றை காட்டுவோம்...

1 ."யோ கோரம் வேஷமாஸ்தாய சரபாக்கியம் மஹேஸ்வர :| ந்ருஸிம்ஹம் லோகஹந்தாரம் ஸ்ம்ஜகாந மஹாபல :| ஹரிக்ஹரந்தம் பாதாப்யா மநுயாந்தி ஸுரேச்வரா :| மாவதீ : புருஷம் விஷ்ணும் விக்ரமஸ்வ மஹாநிசி | க்ருபயாந் பகவாந் விஷ்ணும் விததார நகை: கரை :| சர்மாம்பரோமஹாவீரோ வீரபத்ரோ பபூவஹ || ஸ ஏகோ ருத்ரோ த்யேய : " ( எவர் கோரமான சரபவேஷந் தாங்கி உலகத்தை வருத்திய நரசிங்கத்தை ஹிம்சித்தனரோ, பாதங்களால் அரியை அரிக்கின்றவரோ, புருஷரூப விஷ்ணுவை வதம் செய்யாமல் தேவரீரது பராக்கிரமத்தை மாத்திரம் காட்டியருளல் வேண்டுமென்று சர்வ தேவர்களாலும் மகாநிசியில் பின்றொடர்ந்து பிரார்த்திக்கப்பட்டனரோ, கிருபையினால் நரசிங்கத்தின் தோலை நகங்களாற் கிழித்துரித்தெடுத்து, வஸ்திரமாக அணிந்து கொண்டாரோ, மகாபலமுள்ள வீரபத்திரமூர்த்தியாகிய அந்த உருத்திரர் ஒருவரே தியானிக்கற்பாலர் ) - சரப உபநிஷத்

2. "யோமத்ஸ்ய கூர்மாதி வராஹ ஸிம்ஹாந் விஷ்ணும் க்ரமந்த வாமநமாதி விஷ்ணும் விவிக்லபம் பீட்யமா நம்.. தஸ்மை ருத்ராய நமோ அஸ்து " (எவர் விஷ்ணுவையும் விஷ்ணுவின் அவதாரங்களான மச்சம்,கூர்மம்,வராஹம்,நரசிம்ஹம் முதலியவற்றையும் வாட்டி பீடிக்கின்றாரோ,அந்த ருத்திரருக்கு நமஸ்காரம் ஆகுக ) -சரப உபநிஷத்

ஆனால்,சில வைணவர்கள் சொல்லுவார்கள்,சரபம் நரசிம்ஹத்தை கொல்ல வந்தபோது,அந்த நரசிம்ஹம் அண்டப்பேருண்டம் எனும் பறவையாகி,சரபத்தை கொன்றது என்று..ஆனால்,சரபம் நரசிம்ஹத்தை கொன்ற வரலாறு சுருதியான வேதத்தில் உள்ளது,போற்றப்பட்டுள்ளது....ஆனால்,வைணவர்கள் சொல்லுவது போல்,அண்டப்பேருண்டம் சரபத்தை கொன்றதாகக வேதத்தில் இல்லை...நரசிம்ஹம் சரபத்தால் கொல்லப்பட உண்மை சரித்திரத்தை எண்ணி,மனம் பொறாமல் தான் வைணவர்கள் இப்படி ஒரு கதையை கட்டிவிட்டுள்ளனர்கள் என்று அறிவுடையோர் அறிவர்...

"எரித்தமயிர் வாளர்க்கண் வெற்பெடுக்கத் தோளொடு தாள்
நெரித்தருளும் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினாள்
உரித்த அரித்தோல் உடையான் உறைவிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவர்தாம் தக்காரே"
என்று திருஞான சம்பந்தர் தேவாரத்திலும் சரபேஸ்வரர் பராக்கிரமம் காட்டப்படுகிறது.


"துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை யாகங் கீண்ட
அங்கனகத் திருமாலு மயனுந் தேடு
மாரழலை யனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேன் மன்னி நின்ற
செங்கனகத் திரடோளெஞ் செல்வன் றன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேனானே"
என்று அப்பர் சுவாமிகளும் அருளியுள்ளார்..


இச்சரித்திரம் நமக்கு பல உண்மைகளை கூறுகிறது,அதாவது நாத்திகம் பேசுவொர் சிவனால் தண்டிக்கப்படுவார்கள் மற்றும்,அகங்காரத்துக்கு பிராயச்சித்தம் சிவார்ச்சனையே.....